இயக்கம்

காந்திய மக்கள் இயக்கம்

நண்பர்களே,

  • நாம்  ஈட்டும்  செல்வத்தில்  சிறிது  அளவாவது  சமூக  நலனுக்கு சமர்ப்பணம்  செய்வோம்
  • கற்ற  கல்வியால்  பெற்றிருக்கும் அறிவை  அடுத்தவர்  தம்  அறியாமையை  அகற்றப் பயன்படுத்துவோம்
  • நம்  உடல்  வலிமையால்  சக  மனிதர்களின்  துயர்  துடைக்க உழைப்போம்
  • சுற்றுப்புறத்தைச்  சுத்தமாக்குவோம்!
  • அனாதைகளையும் , அகதிகளையும்  அரவணைப்போம்
  • அரசியல்   நலத்திட்டங்கள் அனைத்தும்   உரியவர்களுக்கு   ஒழுங்காக   சேரும்   வழிவகை காண்போம்
  • மக்களுக்குத்   தீங்கு   தரும்   செயல்களை   செய்பவர்   யாராயினும் காந்திய   வழியில்   சாத்வீக   நெறியில்   எதிர்த்து   நின்று நன்மைகளைத்   தேடித்தருவோம்
  • ஊழலற்ற  புதிய  சமுதாயத்தை  நாம்  வாழும்  மண்ணில் உருவாக்க  நம்மால்  இயன்ற  அளவு தூய்மையான அர்ப்பணிப்புடன்  தொண்டு  செய்வோம்.

சிதறிக்  கிடக்கும்  நல்லவர்கள்  எல்லாம்  ஓர்  அணியில்  திரண்டு   நிற்க,  நமக்காக  உதித்திருப்பதுதான்    காந்திய மக்கள் இயக்கம்”

  ஒருவர் ஒருவராய் முதலில் நாம் உறுப்பினர் ஆவோம்! அதன் பின்பு பல்லாயிரம், இலட்சம் என்று உறுப்பினர் எண்ணிக்கையைப் பெருக்குவோம்.

                 நான் மற்றவர்களைப் போன்ற மனிதன் இல்லை  –   மாவீரன்  நெப்போலியன்

ஆம்,  நண்பர்களே !  நம்  காந்திய மக்கள் இயக்கம்    மற்றவற்றைப் போன்ற   இயக்கம்   இல்லை.   பணம்,  பதவி,  பெருமை ,  புகழ்   என்று அன்றாடம்   அலைபவர்களுக்கு   இடையே   மக்கள்   பணி,   பொதுநல நாட்டம்,   சமூக சேவை,   தன்னலமற்ற   தியாகம்   என்று    புதிய தொண்டர்களின்   திருக்கூட்டம்   காணப்   புறப்படுவோம்!!!   வாருங்கள் ……

அன்புடன் அழைக்கும்,

தமிழருவி மணியன்.

தலைவர், காந்திய மக்கள் இயக்கம்

Copyright 2016, Gandhiya Makkal Iyakkam. All rights reserved.
Registered Office: Thalaivar - Tamilaruvi Maniyan , Gandhiya Makkal Iyakkam, 32,Thiruvengadam street, (E V R Periyar salai – Near Golden Tower Hotel) , Periamedu, Chennai 600 003, India.
காந்திய மக்கள் இயக்கம், எண் 32 , திருவேங்கடம் தெரு (ஈ வெ ரா பெரியார் சாலை - கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்), பெரியமேடு, சென்னை 600 003.