1. ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்கும் ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்படும். நிர்வாகக் குழுவில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் இடம் பெறுவர். இவர்கள் 20 பேர் கொண்ட குழுவில் இருந்து பெரும்பான்மை உறுப்பினர்கள் விருப்பப்படி நியமிக்கப்படுவர்.
2. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்படும். நிர்வாகக் குழுவில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் இடம் பெறுவர். ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவரும் தொகுதிக் குழுவில் இடம் பெறுவார். இவர்களுள் ஐவர் தொகுதி நிர்வாகிகளாகப் பெரும்பான்மை உறுப்பினர்கள் விருப்பப்படி நியமிக்கப்படுவர்.
3. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்படும். தொகுதிக் குழுக்களின் நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட நிர்வாகக் குழுவில் இடம் பெறுவர். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் 10 பேர் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். தலைவர், 2 துணைத் தலைவர்கள், 3 செயலாளர்கள், 3 துணைச் செயலாளர்கள், 1 பொருளாளர் அவர்களுள் நியமிக்கப்டுவர்.
4. அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் மாநிலக் குழுவில் இடம் பெறுவர். மாநிலக்குழு உறுப்பினர்கள் கூடி ஒருவரை மாநிலத் தலைவராக நியமிப்பார். மாநிலத்தலைவர் தன் விருப்பப்படி மாநிலக் குழு உறுப்பினர்களிலிருந்து 3 துணைத் தலைவர்கள், 5 பொதுச் செயலாளர்கள், ஒரு அமைப்புச் செயலாளர், 1 பொருளாளர் என்று 10 பேரை மாநில நிர்வாகிகளாக நியமிப்பார். தேவைப்படும் துணை அமைப்புகளை நியமிக்கும் உரிமை மாநிலத் தலைவருக்கு உண்டு. மாவட்ட அளவில் துணை அமைப்புகளை நியமிக்கும் உரிமை மாவட்ட தலைவருக்கு உண்டு.
5. மாதத்திற்கு ஒரு முறையாவது தவறாமல் கிராமப் பஞ்சாயத்து முதல் மாநில நிர்வாகிகள் வரை கூட்டம் கூட்டி கலந்தாலோசிக்க வேண்டும்.
6. தலைவர், பொருளாளர் இருவரும் இணைந்து கூட்டாக அனைத்துச் செலவுகளையும் செய்ய வேண்டும்.
7. பொருளாளர் வரும் பணத்தைக் கணக்கில் வரவு வைத்து, அவ்வப்போது வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். வரவு-செலவு கணக்கை ஒழுங்காகப் பதிவு செய்ய வேண்டும்.
8. நிர்வாகக்குழு கூடும்போது வரவு செலவு கணக்கைப் பொருளாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
9. தலைவர், பொருளாளர் இருவரும் இணைந்து கூட்டாக வங்கிக் கணக்கை ஆரம்பித்து இயக்க வேண்டும்.
10. அனைத்து நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்.
11. உறுப்பினர்களில் யார் வேண்டுமானாலும் வரவு-செலவு கணக்கைப் பார்வையிடலாம்.