27- 07- 2015
இரங்கல் செய்தி
ஒருவரும் எதிர்பாராத நிலையில் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மரணத்தைத் தழுவிய செய்தி இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. காந்தியப் பண்புகளின் வாழும் வடிவமாக நம்மிடையே வலம் வந்த இந்தியத் தாயின் இணையற்ற தவப்புதல்வர், சமய ஒற்றுமைக்குச் சான்றாகத் திகழ்ந்த மாபெரும் மனிதப் புனிதர், பதவி நாற்காலிக்குத் தனி மரியாதையைத் தேடித்தந்த அரிய தலைவர், நேருவுக்குப் பின்பு இந்திய இளைஞர்களின் இதய சிம்மாசனங்களில் இருக்கையிட்டு அமர்ந்தவர், ஏவுகணைகளை விண்ணில் அனுப்பி உலகத்தின் பார்வையில் இந்தியாவின் அறிவியல் சாதனைகளை உயர்த்திப் பிடித்தவர், எளிமை – ஏழ்மை – பணிவு ஆகியவையே ஓர் ஆண்மஞானியின் அடையாளங்கள் என்பதைத் தன் வாழ்வின் மூலம் வெளிப்படுத்திய தனிப்பெரும் தமிழர் அப்துல் கலாம் அவர்களை காலம் நமிமிடமிருந்து களவாடிச் சென்றாலும் அவர் விதைத்த கனவுகளும், அவர் படைத்த நூல்களும், அவர் உருவாக்கிய சாதனைகளும் நாளும் அவர் பெயரை நம் நினைவுகளில் நிழலாடச் செய்யும்.
-தமிழருவி மணியன்
2 Comments
sankar
மக்களின் மனதில் நம்பிக்கை என்ற தீபத்தை ஏற்றிவைத்தவர்.
senthilkumar
நம் பாரத மண்ணில் இப்படி ஒரு( தலைவர்) ஜனாதிபதி வாழ்ந்தது இல்லை ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி நம் இதயத்தில் அமர்ந்து கொண்டார் இனம் மொழி பாகு பாடு இல்லமால் வாழ்ந்தாவர் அவரை போல் நாமும் வாழ வேண்டும் என்பது காந்தியா மக்கள் இயக்க்ம் கோவை யை சார்ந்தவன் எ பி ஜே அவர்களின் ஆசியுடன் நம் தலைவர் தமிழருவி மணியன் வழியில் நடப்போம்