அரசியலைப் புனிதப்படுத்துவோம் என்று காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் பேசினார்.
காந்திய மக்கள் இயக்கம் சார்பில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் மாற்றத்திற்காகப் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம், திருப்பூர் யூனியன் மில் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதற்கு, திருப்பூர் புறநகர் மாவட்டத் தலைவர் கே.தாமோதரன் தலைமை வகித்தார்.மாநில பொதுச்செயலாளர் துறையூர் ஆ.கணேசன், மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 2016-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இதில், காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் பேசியது:
பதவி ஆசைக்காகவோ, அதிகாரத்தைப் பயன்படுத்தி பெருமளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவோ இந்த வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழுக்கும், தமிழன வளர்ச்சிக்காகவும் இந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மதுவற்ற, ஊழலற்ற நிர்வாகத்தை முன்வைத்தே மக்களைச் சந்தித்து வருகிறோம். அரித்துக் கிடக்கும் அரசியலைப் புனிதப்படுத்துவோம். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தத் தயாராக இல்லை.
யாருடனும் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட மாட்டோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த வேட்பாளர்களில் 10 பேர் வெற்றி பெற்றால் கூட, 2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் காந்திய மக்கள் இயக்கம் தலைமையில் சிறப்பான கூட்டணி ஆட்சி உருவாகும் என்றார்.
முன்னதாக, ஊழல் பெருக்கெடுத்ததற்கு காரணம் ஆட்சியாளர்களின் பொறுப்பின்மையே, மக்களின் விழிப்புணர்வின்மையே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில், வேட்பாளர்களாக, திருப்பூர் வடக்கு-ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவை வடக்கு-மருத்துவர் டென்னிஸ் கோயில்பிள்ளை, குன்னூர்-வள்ளி ரமேஷ், உதகை-வழக்குரைஞர் சுப்பிரமணியன், ஈரோடு மேற்கு-பெரியசாமி, தர்மபுரி-ரகுபதி, ஓசூர்-பாண்டிகுமார், செங்கம்(தனி)-பாண்டு, நாகர்கோயில்-கதிரேசன், குளச்சல்-ஆகாஷ்தேவ், ஸ்ரீவைகுண்டம்-ரெங்கநாதன், மதுரை மேற்கு-ஈஸ்வரன், திண்டுக்கல்-உமாராணி, காரைக்குடி-அருளானந்த், துறையூர்(தனி)-கருப்பையன், லால்குடி-லாரன்ஸ், காஞ்சிபுரம்-தர்மதினகரன், சேப்பாக்கம்-முகம்மது உஷேன் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
Thanks : Dinamani, Source : Dinamani.com
One Comment
Sowmiyarajan
Respected Sir.
Could you please do let me know your e- mail address.
I am a common man like others, But I do have a lot of respect for you.
I am working in IT field.I am @Present in the UK on my company project. Will come back to India by August end.
Have a couple of thought process & idea’s which I feel it can change the fortune of election 2016.
Let me know your availability @ Chennai in the month of September 2015.
Please don’t ignore this.
Thanks
Sowmi