நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியலில் ஊழலுக்கும், குற்றங்களுக்கும் இடம் கிடையாது என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று தமிழருவி மணியன் உறுதியாக தெரிவித்திருந்தார். அவர் அரசியலுக்கு வரவேண்டி அடித்தளம் அமைக்கும் வகையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி மாநாடும் நடத்தினார்.
இந்நிலையில், ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து தமிழருவி மணியன் கூறியதாவது:
காந்தியம் முன்னெடுக்கும் அரசியலே ஆன்மிக அரசியல்தான். ஆன்மிகம் என்பது வேறு, மதம் என்பது வேறு. மதம்சார்ந்த மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே நேசிப்பவர்கள். ஆனால், ஆன்மிகம் அரசியலை விட்டு வேறுபட்டு இருக்கிறது. உலகத்தில் உள்ள அனைவரையும் அன்பினால், அரவணைத்துக் கொள்வதுதான் ஆன்மிகம். அந்த ஆன்மிகம் சார்ந்த அரசியல் வரவேண்டும். எனவே, ஆன்மிக அரசியலில் ஊழலுக்கு இடம் கிடையாது. தவறுகளுக்கு, குற்றங்களுக்கு இடம் கிடையாது. ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிகாந்த், காந்திய வழியில் தடம் பதிக்கிறார் என்றுதான் பொருள். எனவே, காந்திய வழியில் அவருடன் இணைந்து அரசியல் பணியாற்ற விரும்புகிறேன்.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.
http://tamil.thehindu.com/tamilnadu/article22341968.ece
One Comment
நாகராஜன்
ஆன்மிக அரசியல் பற்றி எனது கருத்து:
https://lvnaga.wordpress.com/2008/10/07/decay-of-spiritual-values-in-india/
10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.