ஏழை எளிய மக்களை நேசிக்க வேண்டும். தம்மிடம் உள்ளவற்றில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்கு வழங்கிட வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்துடன் நோன்பு கடைபிடித்து, உலக மக்கள் அனைவரையும் நேசித்து வருகின்ற
நன்நெறி மிக்க இனிய இஸ்லாமிய மக்களுக்கும் ரமலான் மாதம் முழுவதும் பகல்பொழுதுகளில் இரையை தவிர்த்து, பசித்திருந்து, இறையை நேசித்து இறைவனை நினைவுகூர்ந்து நற்செயல்கள் புரிந்த இஸ்லாமிய சகோதர-சகோதிரிகளுக்கும் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் இனிய பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இஸ்லாமிய மக்கள் வாழ்வில் வளமும் நலமும் செழிப்பதொடு, அனைத்துத் துறைகளிலும் சாதித்து, அந்த சாதனையின் பயனை மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்ப செயல்படுத்திடவும் வாழ்த்துகிறேன்