திரு தமிழருவி மணியன் (தலைவர், காந்திய மக்கள் இயக்கம்) 08-06-2013 அன்று சென்னையில் ஈ வெ கி சம்பத் நினைவு சொற்பொழிவு (EVK Sampath Memorial Lecture) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். உலகெங்கும் வாழும் லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களால் பொதுவாழ்வில் வழிகாட்டியாக போற்றப்படும் திரு தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய உரை ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது. இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ‘திரு பொன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஈ வெ கி சம்பத் தேசிய சிந்தனையாளர் பேரவை (EVK Sampath Nationalists Forum) தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.