உலகெங்கிலிருந்தும் நண்பர்கள் பேசுகிறார்கள். யாருக்கு பிரச்னை என்றாலும் ஓடோடி சென்று உதவும் தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றதும் உறவுகள் பதறி துடிப்பதை உணர முடிகிறது.
“எங்களால் முடிந்தது பண உதவி.. உங்கள் அக்கவுண்ட் நம்பர் கொடுங்கள். பணம் அனுப்பி வைக்கிறோம்.. நீங்கள் பொருட்களை வாங்கி விநியோகியுங்கள்” என்கிறார்கள். பணம் பெற்றுக்கொள்ள
மறுப்பதற்கு நண்பர்கள் மன்னிக்கவும்.
பொதுவாக பணத்தை நேரடியாக வாங்கி பிரித்து கொடுப்பது போன்ற பணிகள் மிகவும் சிரமமானவை. கவனமாக கையாள வேண்டியது. அது எனக்கு சரிப்பட்டு வராது என்பதால் யாருக்கு உதவி தேவையோ அவர்களை கை காட்டி விடுவதை மட்டுமே என் வழக்கமாக வைத்திருக்கிறேன்.
அந்த வகையில் வரவு செலவு கணக்குகளை நேர்மையாக கையாளும் நண்பர் எழுத்தாளர் வா.மணிகண்டன் ( Vaa Manikandan அவர்களின் நிசப்தம் அறக்கட்டளையின் வங்கி கணக்கு எண்ணுக்கு நீங்கள் விரும்பும் பணத்தை அனுப்புங்கள். இங்கு அவை சென்னை மட்டுமல்லாது கடலூருக்கும் நிவாரண பொருட்களாக பலருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
பணம் அனுப்பியதும், கணக்கு வழக்குகளை சரிப்பார்ப்பதற்காக ( cartoonistbala@gmail.com, vaamanikandan@gmail.com ) மின்னஞ்சல்களுக்கு அதன் விபரங்கள் அனுப்பிவிடுங்கள். மணிகண்டன் உங்களுக்கு 80G ரசிது அனுப்பிவிடுவார்.
வங்கி விபரங்கள்:
Account Number: 05520200007042
Account Holder Name: Nisaptham Trust
Account Type: Current
Bank : Bank Of Baroda
State : Tamil Nadu
District : Erode
Branch : Nambiyur
IFSC Code : BARB0NAMBIY (5th character is zero)
Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code)
City : Nambiyur
-கார்ட்டூனிஸ்ட் பாலா
4-12-15