திருப்பூர் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் காந்திய மக்கள் இயக்கம் சார்பில், மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது.
காந்திய மக்கள் இயக்க மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். துணை செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் கணேசன் வரவேற்றார். டி.எஸ்.பி., ராஜாராம், போட்டியை துவக்கி வைத்தார். மாணவ, மாணவியர் 19 வயதுக்கு உட்பட்டோர், ஆண்கள், பெண்கள் 19வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு 6 கி.மீ., தூரம்; ஆண்கள், பெண்களுக்கு 15 கி.மீ., வெற்றி இலக்கு. மாணவர்கள் 800 பேர், மாணவியர் 150 பேர் ஆர்வமுடன் ஓடினர்.
ஆண்கள் பிரிவு ஓட்டத்தில், அவிநாசியை சேர்ந்த சசிகுமார் முதலிடம்; காங்கயம் சேரன் கல்லூரி மாணவன் கண்ணன்
இரண்டாமிடம்; திருப்பூரை சேர்ந்த சிவாநந்தம் மூன்றாமிடம்.
மாணவர்கள் பிரிவில், உடுமலை காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளி மாணவன் காளிமுத்து முதலிடம்; திருப்பூர் பி.என்.,ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் அசோக் இரண்டாமிடம்; செஞ்சுரி பவுண்டேஷன் மெட்ரிக் பள்ளி மாணவன் தினேஷ் மூன்றாமிடம்.
மாணவியர் பிரிவு ஓட்டத்தில், திருப்பூர் சாரதா வித்யாலயா மெட்ரிக்பள்ளி மாணவி ஜான்சிராணி முதலிடம்; அதே பள்ளியை சேர்ந்த மைதிலிபிரியா இரண்டாமிடம்; காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவி சவுந்தர்யா மூன்றாமிடம்.
ஆண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு வளம் அமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி; மாணவர்கள் பிரிவுக்கு தெற்கு ரோட்டரி கிளப் தலைவர் சண்முகம்; மாணவியருக்கு “கிரீன் அண்டு கிளீன்’ நிறுவன செயலாளர் உதயகுமார் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Source : Dinamalar.