காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பிலும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் சேலம் பியூஸ் மனுஷ் அவர்கள் மீது சேலம் சிறையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது நம்பிக்கையை தருகிறது. இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, தவறு செய்தவர்கள் தண்டிக்கப் பட அனைத்து முயற்சிகளையும் காந்திய மக்கள் இயக்கம் தொடர்ந்து செய்யும்.