திருப்பூர்:திருப்பூர்
காந்திய மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம், யுனிவர்சல் தியேட்டர் ரோட் டில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில், வரும் 15ம் தேதி காமராஜர் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது; பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெற வேண்டும். கையெழுத்து இயக்கத்தில், திருப்பூர், கோவை மாவட்டங்களில் மட்டும் 10 லட்சம் கையெழுத்து பெற வேண்டும், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இயக்க மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் லியோ ஜோசப், செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.