‘தானே’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகத் தன்னால் முடிந்த அளவுக்கு பணம் வசூல் செய்து கொடுப்பதைத் தனது கடமையாகக் கொண்டுள்ளார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். திருப்பூரில் நடந்த கூட்டத்தில் வசூல் ஆன ரூபாய் 67 ஆயிரத்தை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் திண்டல் அருகில் உள்ளது வேளாளர் மகளிர் கல்லூரி. அங்கு பேசச் சென்ற தமிழருவி மணியன், மாணவியரிடம் துண்டு ஏந்தி நேரடியாக வசூல் செய்தார். மாணவியர் அனைவரும் தங்கள் கையில் இருந்த பணத்தைத் எடுத்து வழங்க 15 ஆயிரம் ரூபாய் வசூல் ஆனது. இதையடுத்து, புதுக்கோட்டையில் கவிஞர் முகேஷ் நடத்திய இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற மணியன், அங்கும் விகடனின் பணிகளை விவரித்தார். கூட்டத்துக்கு வந்திருந்த அனைவரும் அள்ளிக்கொடுத்தார்கள். 15,345 ரூபாய் அதில் சேர்ந்தது. அந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் வசூலான தொகையை, தமிழருவி மணியன் விகடன் நிதியில் சேர்த்து விட்டார்.
Nandri: Vikatan