காந்திய மக்கள் இயக்கம் எந்த ஒரு அரசியல் கூட்டணியிலும் இடம் பெற்று வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்காது. காந்திய மக்கள் இயக்க வேட்பாளர்கள் பிற கட்சிகளின் ஆதரவை நாடாமல் உண்மை, உழைப்பு, நேர்மை, சேவை ஆகியவற்றை மட்டுமே நம்பி மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக களத்தில் நிற்கிறார்கள். எந்த வகைக் கூட்டணி அமைந்தாலும் அந்தக் கூட்டணியில் நிச்சயம் காந்திய மக்கள் இயக்கம் இடம் பெறாது.
ஆனால் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., அல்லாத ஓர் அணியை இடது சாரிகள் வெற்றிகரமாக அமைத்தால், காந்திய மக்கள் இயக்க வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில், அந்த அணிக்கு காந்திய மக்கள் இயக்கம் வாக்களிக்கும்.
அதைத் தவிர, எக்காரணம் கொண்டும் ஜாதி, மதங்களை முன்னிறுத்தி தங்கள் சொந்த நலனுக்கு ஆதாயம் தேடும் கட்சிகளோடு காந்திய மக்கள் இயக்கம் ஒரு நாளும் இணக்கம் கொள்ளாது.
மக்கள் நலனை முன்னிறுத்தி அரசு இழைக்கும் தவறுகளை எதிர்த்து இடதுசாரிகள் நடத்தும் போராட்டங்களுக்கு காந்திய மக்கள் இயக்கம் ஆதரவாகச் செயற்படும்…..