தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து பிரதிகளை காந்திய மக்கள் இயக்கத்திடம் ஒப்படைக்கும் விழா வியாழக்கிழமை (டிசம்பர் 6 2012) நடைபெற்றது.
- பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, புத்தர் உடற்பயிற்சிக்கூடம் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதம் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டது.
- மொத்தம் 5 ஆயிரம் பேரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. அக்கையெழுத்து பிரதிகளை காந்திய மக்கள் இயக்கத்திடம் ஒப்படைக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புத்தர் உடற்பயிற்சிக் கூட நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கராத்தே பயிற்சியாளர்கள் விநாயகம், வடிவழகன் முன்னிலை வகித்தனர்.
காந்திய மக்கள் இயக்கத்தினர் நடத்தி வரும் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இவ்விழா நடைபெற்றது. காந்திய மக்கள் இயக்க தலைமை நிலையச் செயலர் இனியன் ஜான், மாவட்டத் தலைவர் எம்.சபீக், செயற்குழு உறுப்பினர் பூபதி ஆகியோர் கையெழுத்து பிரதிகளை பெற்றனர்.