பொதுக் குழுவிற்கு இயக்க உறுப்பினர்களையும், பொதுக் கூட்டத்திற்கு பொது மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் . . .
——————————————————————————————
06 02 17
அன்பிற்கினியவருக்கு,
வணக்கம். வளர்க நலம்.
நான் முன்பே குறிப்பிட்டிருந்தபடி, தமிழக அரசியல் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, கலைஞர் அவர்களின் நேரடி அரசியல் பங்களிப்பு இல்லாத நிலையில், ஒரு மாறுபட்ட அரசியல் சூழலை சந்தித்து வருகிறது. ஜல்லிக்கட்டை முன் வைத்து மாணவர்கள் – இளைஞர்கள் – பொது மக்கள் நடத்திய தன்னெழுச்சிப் போராட்டங்கள், பொதுவெளியில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியள்ளன.
“இந்தப் பின்னணியில், நமது இயக்கம் மக்கள் விரும்பும் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் – மதுவற்ற மாநிலம் – ஊழலற்ற நிர்வாகம் என்ற நமது தாரக மந்திரத்தை செயல் வடிவுக்கு கொண்டு வர வேண்டும் – தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக காந்திய மக்கள் இயக்கம் வளத்தெடுக்கப்பட வேண்டும் ” என்ற உங்கள் உள்ளக் கிடக்கைகளுக்கு உருவகம் கொடுத்திடும் வகையில், களப் பணிகளை வரையறுத்திட, இயக்கத்தின் மாநிலப் பொதுக் குழு, கோயம்புத்தூர் ரங்கா மஹாலில் (சிங்காநல்லூர், திருச்சி பிரதான சாலை, சாந்தி கியர்ஸ் எதிரில்), வரும் 12 02 17, ஞாயிறு காலை சரியாக 10 மணிக்கு கூடுகிறது.
அன்று மாலையே சரியாக 6 மணிக்கு, கோயம்புத்தூர், சித்தாபுதூரில், வி கே கே மேனன் சாலையில் நடைபெற இருக்கும் பொதுக் கூட்டத்தில் “இன்றைய தமிழக அரசியல் எங்கே போகிறது?” என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன்.
இரண்டு நிகழ்வுகளிலும், தாங்கள் தவறாது பங்கேற்று ” நாங்கள் வேடிக்கை மனிதர்கள் அல்ல – வினையாற்றப் பிறந்தவர்கள்” என்பதினை உறுதிப்படுத்திட அன்புடன் அழைக்கிறேன்.
தமிழருவி மணியன்
தலைவர் – காந்திய மக்கள் இயக்கம்