1. ஊழல் பாஜக முதல்வர்கள் பதவி விலக வேண்டும்
2. நிலப் பறிப்புச் சட்டத்தை கைவிடுக!
3. விலைவாசியை கட்டுப்படுத்துக!
4. மதுவிலக்கை படிப்படியாக அமலாக்குக!
5. மீத்தேன் திட்டத்தை முற்றாக கைவிடுக!
ஆக.13 பெருந்திரள் பேரணி – ஆர்ப்பாட்டம்
சிபிஎம் – சிபிஐ – மதிமுக – விசிக – மமக – காந்திய மக்கள் இயக்கத் தலைவர்கள் கூட்டாக அழைப்பு
****
தீர்மானங்கள், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1) ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மத்திய அமைச்சர் களும், பாஜக முதலமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்து விசார ணையை சந்திக்க வேண்டும்.
2) மத்திய அரசு முன்மொழியும் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத் தையும், குழந்தைத் தொழிலாளர் நல திருத்தச் சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும்.
3) நாடு முழுவதும் அதி கரித்து வரும் விவசாயிகள் தற்கொலைகளைத் தடுத்திட, விவசாயிகளின் வாழ் வாதாரத்தை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
4) மத்திய பாஜக அரசின் வகுப்புவாத நடவடிக்கைகளைக் கண்டிப்ப தோடு, மதக் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி வரும் சங்பரிவார் அமைப் பினர் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
5) உலகமய, தாராளமய கொள்கைகளால் உயர்ந்து வரும் விலைவாசி யைக் கட்டுப்படுத்தவும், வேலையின்மையைப் போக்கவும், மானியங் களை வெட்டி, உணவுப் பாது காப்பை கேள்விக்குள்ளாக்கும் நட வடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
6) தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் புரிவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ‘லோக் ஆயுக்தா’ சட்டம் நிறைவேற்ற வேண்டும், கட்டுப்பாடின்றி கனிம வளங்களைச் சூறையாடுவதைத் தடுப்பது, சீரழிந்து வரும் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாத்து மக்களுக்கு அமைதியான வாழ்வை உறுதிப்படுத்துவது, காவல் நிலைய அத்துமீறல்கள், ஜனநாயக உரிமைகள் பறிப்பு ஆகியவைகளைத் தடுத்து நிறுத்துவது, சாதியக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. ஆணவக் கொலைகளைத் தடுத்திட தனிச் சட்டம் இயற்றுவது ஆகியவைகளை மேற்கொள்ள வேண்டும்.
7) ஆந்திராவில் காவல்துறை யினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்கள் பிரச்சனையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் இவ்வழக்கில் தமிழக அரசும் தன்னை ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
8) நடுவர் மன்றத் தீர்ப்பின் படி, காவிரி மேம்பாட்டு ஆணையம், ஒழுங்குமுறைக் குழுவினை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் அமைத்திட வேண்டும், தமிழகத்துக்கு உடனடியாக நடுவர்மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும், தமிழக அரசு இவைகளை நிறைவேற்ற – மத்திய மற்றும் கர்நாடக அரசை வலியுறுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
9) தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகை பாக்கி சுமார் ரூ. 1000 கோடி பெற்றுத் தருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
10) தமிழ்நாட்டில் மதுவிலக்கினை படிப்படியாக அமலாக்கிட வேண்டும், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை மத்திய அரசு சீரழிப்பதைக் கைவிட்டு முழுமையாக செயல்படுத் திட வேண்டும்.
11) இலங்கைத் தீவில்சிங்கள அரசால் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலையை நடத்திய குற்றவாளிகளை சர்வதேச நிபுணர்களைக் கொண்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இலங்கை வடக்கு கிழக்கு மாநிலங்களில் சிங்கள ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும். தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் தொடர்ந்து கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்துவது, படுகொலை செய்வது, படகுகளை பறிமுதல்செய்வது ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுப்பதுடன், தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
12) இந்தியாவில் மரணதண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
தற்போது தூக்குமேடையில் நிறுத்தப்பட்டுள்ள யாகூப் மேமன்இந்திய அரசுக்கு உதவும்விதத்தில் நம்பிக்கையூட்டப்பட்டு சரணடைந்து இந்தியாவுக்கு அவர் வந்ததாகவும், அவர் தூக்கிலிடப்படக் கூடாது என்றும் `ரா’ உளவு நிறுவன முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ள நிலையில் யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.
13) மத்திய அரசு ஓஎன்ஜிசி மூலம் மறைமுகமாக மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளதை முழுமையாக கைவிட வேண்டும்.
14) மத்திய பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து செப்.2ம் தேதி நடக்கவுள்ள நாடுதழுவிய வேலைநிறுத்தம், ரயில் மறியல்,சாலை மறியல் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதோடு, இப்போராட்டங்களில் தமிழக மக்கள் எழுச்சியுடன் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
15) கடந்த 8 நாட்களாக தங்களது ஊதிய மாற்றுஉயர்விற்காக போராடி வரும் நெய்வேலி தொழிலாளர் பிரச்சனையில் மத்திய அரசு உடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆகஸ்ட் 13 – பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றிட, மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தி மேலே குறிப்பிட்டுள்ள கட்சிகளின் சார்பில்13.8.2015 அன்று சென்னை, தஞ்சை, மதுரை, நெல்லை,ஈரோடு ஆகிய நகரங்களில் மண்டல அளவிலான பெருந்திரள் பேரணி,ஆர்ப்பாட்டம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள், இம்மகத்தான இயக்கத்தில் பங்குகொள்ள தமிழக மக்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் என அழைப்பு விடுத்தனர்.
தேர்தல் பற்றி விவாதிக்கவில்லை
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்த அவர், “கூட்டு இயக்கம் நடத்த தேமுதிக, தாமக கட்சிகளையும் அழைத்துள்ளோம். தேர்தலுக்கு பல மாதங்கள் இருக்கின்றன. இன்றைக்கு நடந்த கூட்டம் மக்கள் பிரச்சனைகளை மட்டுமே விவாதித்து கூட்டு இயக்கத்திற்கு திட்டமிட்டுள்ளோம். தேர்தல் பற்றி விவாதிக்க வில்லை” என்றார்.
வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் பதிலளிக்கையில், “139 நாடுகளில் மரண தண்டனை கூடாது. மரண தண்டனையை முற்றாக நாங்கள் எதிர்க்கிறோம். ஆகவே, யாகூப் மேமனை தூக்கிலிடக்கூடாது” என்றார்.