சேலம், : சேலம் மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் நேற்று புதிய பேருந்து நிலையத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து பிரசாரத்தைத் துவங்கியது. மாவட்டத் தலைவர் தியாகராசன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சுந்தரம் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் அருணாச்சலம், ஜெயசந்திரன், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கையெழுத்து பிரசாரத்தை மாநில துணைத்தலைவர் நரசிம்மன் துவக்கி வைத்தார்.
மது விற்பனை நேரத்தைக் குறைத்தல், டாஸ்மாக் விற்பனைக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை விடுதல், பள்ளி மாணவர்கள் மத்தியில் போதையினால் ஏற்படும் பிரச்னை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொது மக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கி கையெழுத்து பெற்றனர். சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.