மறுப்பு அறிக்கை
25-03-2016 இந்து தமிழ் நாளிதழில் டாக்டர் காமராஜ் என்பவர் பெயரில் ஓர் அறிக்கை வெளிவந்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. காந்திய மக்கள் இயக்கம் சார்பில் எந்த ஒன்றையும் அறிவிப்பதற்கான அதிகாரம் அந்த நபருக்கு வழங்கப்பட வில்லை. கோவை பத்திரிக்கையாளர் சங்கத்தில் கூட்டம் கூடுவதாகவும் அவரவர் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என்றும் வந்த அழைப்பின் பேரில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் டாக்டர். டென்னிஸ் கோவில் பிள்ளை அவர்கள் பங்கேற்றார்.
அ.தி.மு.க., – தி.மு.க., எதிர்ப்பு என்கிற பெயரில் அங்கு அரங்கேறிய விஷமத்தனமான வியூகத்தை தெரிந்த அக்கணமே காந்திய மக்கள் இயக்கமும் அப்துல்கலாம் லட்சிய இந்தியக் கட்சியும் மட்டுமே கூட்டணி அமைத்து “மாற்று அரசியல் கூட்டணி” என்ற பெயரில் களம் காண்பதைத் தெரிவித்து விட்டு கூட்டத்திலிருந்து டாக்டர். கோவில் பிள்ளை வெளியேறிவிட்டார்.
காமராஜ் என்கிற நபர் வெளியிட்டிருக்கும் அந்தச் செய்திக்கும் காந்திய மக்கள் இயக்கத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை. லட்சிய இந்தியக் கட்சியைத் தவிர வேறு எந்த அமைப்புடன் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ காந்திய மக்கள் இயக்கம் தேர்தல் உறவு கொள்ளவில்லை.
– தமிழருவி மணியன்