காஷ்மீரில் பாரூக் அப்துல்லா குடும்பத்தில் இருந்து தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி குடும்பம் வரை வாரிசு அரசியல் இல்லாத மாநிலமே இல்லை என்று சொல்லக்கூடிய சூழல் உருவெடுத்திருக்கிறது. ஒரு வாரிசு அரசியலை வளர்த்து எடுக்காத அரசியல் கட்சி என்று, தேடித் தேடி நீங்கள் சலித்து சலித்து பார்த்தாலும் சித்தாந்த ரீதியாக தங்களை ஈடுபடுத்திக் கொண்ட கம்யூனிஸ்ட்களையே, நம்மால் 100 விழுக்காடு, அப்படி மதிப்பெண் கொடுத்து காணமுடியவில்லை என்றால் மற்ற கட்சிகளைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை.
இன்றைக்கு தி.மு.க.வில் வாரிசு அரசியல் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மாற்றாக திரும்பிப் பார்த்தால் பா.ம.க., பா.ம.க. வாரிசு அரசியலை திட்டமிட்டே வளர்த்து வைத்திருக்கிறது. அதற்கு மாற்றாக வந்திருப்பதாக சொல்லிக்கொள்ளக் கூடிய விஜயகாந்தின் தே.மு.தி.க. அதைப் பார்த்தால் அவர் எங்கு வந்தாலும் தன்னுடைய மனைவியோடும் மைத்துனரோடும் தான் வருகிறார். அந்த இயக்கத்தின் விதியை அந்த மூன்று பேர் தான் சேர்ந்து எழுதிக் கொண்டிருக்கிற…ார்கள் என்கிற பொழுது வாரிசு அரசியல் என்பது அறவே தவிர்க்கப்பட வேண்டும்….
புதிய தலைமுறை தொலைக்காட்சி –
விடை தேடும் விவாதங்கள் 19-08-2012