விருதுநகர்:காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, விருதுநகரில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி துவங்கியது.விருதுநகரில் தமிழருவி மணியன் காந்திய மக்கள் இயக்கம் சார்பில், காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பூரண மது விலக்கை வலியுறுத்தி ,ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் பணி துவங்கியது. முதல் நாளில் மாணிக்கம் தாகூர் எம்.பி., பாண்டியராஜன் எம்.எல்.ஏ., பா.ஜ., மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், வணிகர் ராஜசேகரன், நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல் ராஜ், நகர் நல அமைப்பு செயலாளர் டாக்டர் ரத்தினவேல், லயன்ஸ் மாவட்ட தலைவர் செல்வராஜ், காங்., ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், பாண்டியன் கிராம வங்கி துணை த்தலைவர் பாலகிருஷ்ணசாமி, பா.ஜ.,நகர தலைவர் சந்திரன் உட்பட 3000 பேர் கையெழுத்திட்டனர்.
Thanks: Dinamalar
One Comment
Emmanuel Mallar
நல்லது நடந்தா சரிதான் தலைவா !!!