ஒரு ஆட்சியில் இருக்ககூடிய ஒருவரை அகற்றிவிட்டு இன்னொருவரை கொண்டு வந்து அமர்த்துவது என்பது வேறு , அது வெறும் காட்சி மாற்றம் அல்லது ஆள் மாற்றம்.
தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான ஆட்சி அமைய வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் விரும்புகிறது. இந்த நோக்கிலேயே கடந்த ஆண்டில் 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தோம். இந்த சூழலில், எங்களுடன் ஒத்த கருத்து உடைய அப்துல் கலாம் இந்திய லட்சியக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்..
இது ” மாற்று அரசியல் கூட்டணி ” என்ற பெயரில் அமைந்திருக்கிறது.