Political Leaders Support Gandhian Sasiperumal:
Many Political leaders met Gandhian Sasiperumal, who has been fasting for the past 30 days. He began his fasting strike on 30th January and still continues it. Many leaders of political parties met Gandhian Sasiperumal and tried to convince him to stop fasting.
Since Sasiperumal’s health condition is going worse, his blood samples are taken by the doctors to the hospital for Blood Test. Leaders of Communist party Pandiyan, State Secretary and the Chief leader Nallakannu, Srinivasan, State Secretary of BJP, Actors S.V. Sekar and Sivakumar met Sasiperumal in person and showed their support. They insisted the Government to consider the demand of Sasiperumal and make necessary action.
சசிபெருமாள் உடல்நிலை மேலும் மோசம்: 30 வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, 30ஆவது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி சசி பெருமாளின் உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் தங்கபாலு, பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று அவரை நேரில் சந்தித்துப் பேசினர். உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், தண்ணீர்கூட குடிக்கமுடியாத அளவிற்கு அவரது உடல்நிலை மோசமாகியுள்ளது. மேலும், மவுன விரதமும் இருந்து வரும் அவர் இன்று எழுத்து மூலமாகக்கூட தனது பதிலை தெரிவிக்க முடியவில்லை. முன்னதாக கோரிக்கை நிறைவேறும் வரை தனது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று நேற்று எழுத்து மூலமாக அவர் தெரிவித்திருந்தார்.